
agatiyar

agatiyar
Thursday, October 6, 2011
Agastheeswarar Temple, Villivakkam, Chennai
Agastheeswarar Temple, Villivakkam, Chennai (அகஸ்தீஸ்வரர் சுவாமி)
Location:
The Agastheeswarar Temple is located in Sivan Koil Street, Villivakkam, Chennai. The temple is around 1 km from the Villivakkam bus terminus.Description:
The Agastheeswarar Temple is dedicated to Sri Shiva as Agastheeswarar Swamyand Divine Mother Shakti asSwarnambikai.Shrines and Deities:
Main Shrines:
- Sri Shiva as Agastheeswarar Swamy(அகஸ்தீஸ்வரர் சுவாமி)
- Devi as Swarnambikai(சொர்ணாம்பிகை)
Sri Brahma:
- Sri Brahma
Sri Vishnu:
- Sri Maha Vishnu
Sri Shiva:
- Sri Dakshinamurthy
- Sri Somaskandar (சொமாஸ்கந்தர்)
- Sri Natarajar
Devi:
- Devi Kamakshi Amman (காமாக்ஷி அம்மன்) (picture)
- Devi Karumari Amman (கருமாரி அம்மன்) (picture)
- Sri Durgai Amman
Sri Ganesha:
- Sri Ganapati
Sri Murugan:
- Sri Valli Subramaniar Deivanai
Sri Ayyappan:
- Sri Ayyapar (ஐயப்பர்) (picture)
Others:
- Nayanmars
- Sri Chandikeswar
- Sri Adi Shankara
- Sri Suriyan
- Navagrahas
- Snake Gods
Agastheeswarar Temple, Kolathur, Chennai, South India.
Kolathur is a little known residential area of Chennai city in South India. Only few would know that there is an ancient temple for Lord Shiva located in this area. Lord Shiva is named as Agastheeswarar in this temple. It is believed that the Shiv Linga in this temple was orginally installed by the sage Agastya. This little but ancient temple of Agastheeswarar is located opposite to Ganga Theatre in Kolathur area of Chennai city. This temple doesn’t have a tower. Instead, the idols of Agastya rishi worshipping Shiv Linga is depicted in the place
of tower.
The main shrine has the small Linga. The Goddess of the temple Akilandeswari is found in a separate shrine. Both the shrines face the eastern direction. There is no flag staff or bali peeth in this temple. However, there is a small Nandi idol facing the main shrine.
The small prakara (corridor) of the temple has the shrines of Ganesha and Muruga with Valli and Devasena. The wall surrounding the main shrine has the images of Ganesha, Dakshinamurthy, Lingotbava, Brahma, Durga and Chandikeswarar.
Happy travelling.
Agastheeswarar Temple, Nungambakkam, Chennai
Agastheeswarar Temple, Nungambakkam, Chennai (அகத்தீஸ்வரர்)
Location:
The Agastheeswarar Temple is located near the police station in Valluvarkottam High Road, Nungambakkam, Chennai.Description:
The Agastheeswarar Temple is dedicated to Sri Shiva as Agastheeswarar and Divine Mother Shakti as Akhilandeswari.Shines and Deities:
Main Shrines:
- Sri Shiva as Agastheeswarar(அகத்தீஸ்வரர்)
- Devi as Akhilandeswari(அகிலாண்டேஸ்வரி)
Sri Brahma:
- Sri Brahma (ப்ரம்மா)
Sri Vishnu:
- Sri Mahavishnu (மஹாவிஷ்ணு)
Sri Shiva:
- Sri Dakshinamurthy (தக்ஷிணாமூர்த்தி)
- Sri (Vishalakshi Samet) Kashi Viswanathar (விசாலாட்சி சமேத் காசி விஸ்வநாதர்)
- Sri Bhairavar (பைரவர்)
Devi:
- Devi Durgai Ambal (துர்கை அம்பள்)
- Devi Lakshmi - Durga - Saraswati (லெக்ஷ்மி - துர்கா - சரஸ்வதி)
- Sri Vishalakshi (Samet Kashi Viswanathar) (விசாலாட்சி சமேத் காசி விஸ்வநாதர்)
Tri-Shakti:
- Devi Iccha Shakti (இச்சாசக்தி)
- Devi Jnana Shakti (ஞானசக்தி)
- Devi Kriya Shakti (கிரியாசக்தி)
Sri Ganesha:
- Sri Maha Ganapati (மஹா கணபதி)
- Sri Varasiddhi Vinayagar (வரசித்தி விநாயகர்)
Sri Murugan:
- Sri Valli Arumugar Deivanai (வள்ளி ஆறுமுகர் தெய்வானை)
Others:
- Nalvars - Appar, Sundarar, Mannikkavasagar, Thirugnanasambandar (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்மந்தர்)
- Sri Chandikeswarar (சண்டிகேச்வரர்)
- Sri Nandi
- Sri Chandran (சந்திரன்)
- Sri Suriyan (சூரியன்)
- Naga Lingam
- Navagrahas (நவக்கிரக)
Santhana Kuravargal (சந்தாண குரவர்கள்):
- Sri Meykanda Devar (மெய்கண்டதேவர்)
- Sri Arunandhi Shivam (அருன்நந்தி சிவம்)
- Sri Marainyana Sambandhar (மரைஞான சம்பந்தர்)
- Sri Umapathy Shivam (உமாபதி சிவம்)
Thursday, July 21, 2011
சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள்
சித்தர்கள் –
தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.
சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
உண்மைச் செய்தி –
பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.
பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்
அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –
1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி
வேறுபாடுகள் அற்றவர்கள் –
இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.
அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.
இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.
108 சித்தர்களின் பெயர்கள் -
நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.
1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.
ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.
18 சித்தர்களின் வரலாறு
சதுரகிரி (மகாலிங்கமலை)
“தானான வேதங்கள் நான்கு மொன்றாய்ச்
சார்ந்திங்கோ ருருவாகச் சமைந்ததாலே
வேனானபெயர் சதுரகிரி ஈதென்றே”
என்பது காலங்கிநாத முனிவர் வாக்கு. ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் நான்கும் ஒன்றாகச் சேர்ந்து இம்மலை உருக் கொண்டதால் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறதென்பது இவர் கூற்று.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் நான்கு பக்கங்களும் குன்றுகளால் சூழப்பட்டு, நடுவில் அமைந்துள்ள வட்டமான பள்ளத்தாக்கில் “சுந்தரலிங்கம்”, “மகாலிங்கம்”, “சந்தனலிங்கம்” ஆகிய மூன்று லிங்கத் திருமேனிகளும் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றும் பூஜித்து வரப்படுகின்றன. அச்சித்தர்களது யோக தண்டக்கோல்கள் இன்றும் இச் சன்னிதிகளில் வைக்கப்பட்டுள்ளன. நான்கு புறமும் அமைந்துள்ள குன்றுகள் சதுரமாகத் தோன்றுவதால் “சதுரகிரி” எனப்பெயர் பெற்றதாகக் கொள்ளலாம். அன்றும், இன்றும், என்றும் சித்தர்கள் வாழும் பூமி இது.
நம் காலத்தில் வாழ்ந்த சித்த மகா புருஷர்களும் இம்மலைமீது மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர். ஸ்ரீவல்லநாட்டு சுவாமிகள் அடிக்கடி இங்கு வந்து, பல திசைகளுக்கும் சென்று அங்கங்கு அவர் உணர்ந்த இடங்களிலெல்லாம் பூஜை செய்வது வழக்கம். ரங்கபாளையம் ஸ்ரீ முனியாண்டி சுவாமிகள் இங்கு வரும்போதெல்லாம் இரவு முழுவதும் தனியே கானகங்களில் சஞ்சாரம் செய்து சித்தர்கள் அருள் பெற்றவர். இவர் மகாலிங்க சுவாமியுடன் நேரில் பேசுவாரெனக் கூறுவார் உண்டு. யோகாசன ஆலய நிறுவனர் யோகமகாரத்னா தவத்திரு. கோ.மு. சுவாமியவர்கள், “இம்மலையெங்கும் இறையருள் நிரம்பியுள்ளது. அவரவர் பக்குவ நிலைக்கேற்ப உணர்வுகள், காட்சிகள் கொடுத்து ஆன்மா உயர்வதற்குரிய தபோவனமது” என்று இங்கு வந்திருந்தபோது குறிப்பிட்டார். ஞானானுபூதி பெற்ற பெரியோர்களுக்கு இன்றும் சித்தர்கள் தரிசனமளித்து ஆசி வழங்குகின்றனர் இம்மலையில்.
இம்மலைக்குச் செல்லும் பாதைகளுள் வத்திராயிருப்பில் இருந்து செல்லும் வழியே சிரமக் குறைவானதாகும். வத்திராயிருப்பிலிருந்து சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தூரமுள்ள “தானிப் பாறை” என்ற மலை அடிவாரம் அடையவேண்டும். ரோடுகள், பஸ்கள் வருவதற்கு முன்பு, ஆடி அமாவாசை உற்சவத்தின்போது பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் வந்து தங்கியிருந்த இடம் தானிப்பாறை (வண்டிப்பண்ணை) என அழைக்கப்படுகிறது.
இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தூரம் கால்நடையாக மலையேறி செல்ல வேண்டும். அடிவாரத்திலேயே அழகிய அருவியும் சிற்றாறும் உண்டு. இங்குள்ள விநாயகரை வழிபட்டே நம் மலைப்பயணம் தொடங்குகிறது. சாதாரணமாகக் காணப்படும் இடம்புரி அல்லது வலம்புரி விநாயகராக இல்லாமல், துதிக்கையை உயர்த்தி, ஆசி வழங்கும் நிலையில் “ஆசீர்வாதப் பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார். அடிவாரக் காவல் தெய்வமான கருப்ப சுவாமியையும் வழிபட்டு மலையேறத் தொடங்குகிறோம்.
இளைப்பாற வசதியாக நாம் காணும் முதல் இடம் “குதிரை குத்தி” என அழைக்கப்படும் சிற்றோடை. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர் காலத்தில், இப்போது பாதை இல்லாமல் இந்த ஓடையிலிருந்து சற்று உயரமான குன்றிலேயே பாதை சென்றுள்ளது.
வெள்ளையர்கள் பயன்படுத்திய அப்பாதை இன்று வழக்கத்தில் இல்லை. குதிரை மீது அவர்கள் மலைக்குச் சென்றபோது, இக்குன்றின் மேல் ஏறாமல், குதிரை நிலை குத்தி நின்றதால் இவ்விடம் ‘குதிரை குத்தி’ என்று அழைக்கப்படுகிறது. அடுத்து நாம் கடப்பது வழுக்குப்பாறை. மலையின் சாய்வான பகுதி. மழைக்காலத்தில் கவனமின்றி சென்றால் வழுக்கி விழ நேரலாம். இப்பாறையின் சரிவில் இரு குகைகள் உள்ளன. இளைப்பாறி செல்ல வசதியானவை. இக்குகைகளில் பாம்பாட்டிச் சித்தர் இருந்ததாக காலங்கிநாதர் ஞானவிந்த இரகசியம் தெரிவிக்கிறது.
மலை நடையில் அசதி மேலிட்டு, சற்று ஓய்வு எடுக்கலாம் என எண்ணும்போது நாம் அடையும் இடம் “அத்தியூத்து”. அத்திரி முனிவர் இருந்ததாகக் குறிக்கப்படும் குகையில் இருந்து ஊற்று, பெருக்கெடுத்து ஓடையாக ஓடுகிறது. கரையில் பெரும் அத்திமரம் ஒன்றுள்ளது. இங்கு குளித்துவிட்டு கொண்டு செல்லும் உணவு வகைகள் உட்கொண்டு, சாவகாசமாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அத்திப்பழ சீசன் காலமெனில் பகலில் குரங்குகளும், மாலையில் கரடிகளும் இங்கு வருவதுண்டு. இதைத் தவிர நீர்நிலைகள் உள்ள இடமெல்லாம் யானைகள் நடமாட்டமும் சாதாரணமாக இம்மலையிலுள்ளது.
அத்தி ஊத்திலிருந்து உயரமான மலையில் பாதை செல்கிறது. இரு கொண்டை ஊசி வளைவுகள் மேலேற்றுகிறது. இவ்வளைவுகள் கொண்ட பாதையை நம் முன்னோர்கள் “கோணத் தலைவாசல்” என அழகிய காரணப் பெயரிட்டு அழைத்துள்ளனர். வழி நெடுக ஆங்காங்கே சிறிய பெரிய குகைகள் உள்ளன.
அவைகளில் சித்தர்கள் இன்றும் சிலருக்கு அவ்வப்போது காட்சியளிக்கிறார்களென்பது உண்மை. நீர் வளமோ, மர வளமோ இல்லாத இடங்களில் உள்ள இத்தகைய குகைகளில் சில குகைகள் மட்டும் ஏர் கண்டிசன் செய்தது போல் உள்ளதை உணரலாம். அங்கு எல்லாம் சித்தர்கள் வாழ்கிறார்கள் என்று ஐதிகம். திருமூலர், அகத்தியர், காலங்கி நாதர், போகர், புசுண்டர், கோரக்கர் முதலான சித்தர்கள் வாழ்த்தி வாழும் பகுதி அவர்கள் பெயரால் வனமென அழைக்கப்படுகிறது.
அடுத்து நாம் சற்று ஓய்வெடுப்பது, கோரக்கர் குகை என வழங்கும், கோரக்கநாதர் தவமிருந்த குகையாகும். செல்லும் பாதையிலிருந்து சுமார் இருபதடி கீழிறங்கி இக்குகையை அடைய வேண்டும். அழகிய வடிவமைந்த பெரும் பள்ளம் பாறையில் உள்ளது. அது கஞ்சா கடைந்த குண்டு எனக் கூறப்படுகிறது. சலசலத்து ஓடும் சிற்றோடை குகை வாயிலில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த கோரக்கர் தீர்த்தத்தில் குளிப்போர் நோய் நீங்கும், இருகரங்களையும் சேர்த்து நீரெடுத்து மும்முறை அருந்தினால் ஜென்ம சாபல்யமடையுமென்பது காலங்கிநாதர் வாக்கு. இக்குகையில் தியானத்தில் அமர்ந்தால், நமது பக்குவ நிலைக்கேற்ப காட்சிகள் தோன்றுகின்றன. சதுரகிரி தரிசனத்தில் இக்குகையில் தியானத்தில் ஈடுபடுவதும் முக்கிய அம்சமாகும்.
அரிசிப் பாறை என்ற இடத்தில் மணல் அரிசி போன்று கிடப்பதைக் காணலாம். இடத்திற்குப் பெயர் சூட்டுவதில் நம் முன்னோர்கள் காரணப் பெயராக அமைத்திருப்பது வியப்பளிக்கிறது, இங்கு இயற்கையாகவே கல்லில் அமைந்த குமார்கள் பீடம் (காலற்ற நாற்காலி போன்று) உள்ளது. மேலே செல்லும் வழியில் நாம் தரிசிப்பது “இரட்டைலிங்கம்” சங்கரநாராயணர் என இவ்விரு லிங்கங்களையும் வழிபடுகின்றனர்.
பசுக்கிடை எனும் இரு சமவெளிகள் அடுத்துள்ளது. மலையில் மாடுகள் மேய்ப்போர் பசுக்களை இச்சமவெளிகளில் ஒன்றாக நிறுத்தி, சுற்றிலும் முள் வேலியிட்டு, இரவு பகலாக கண் விழித்து காட்டு மிருகங்களிடமிருந்து மாடுகளைக் காப்பர். இப்பசுக்கிடைகளைக் கடந்ததும் கோயில் எல்லையை அடைகிறோம். இவ்விடம் நாம் நெருங்கியதும் இறையருளால் ஒரு பைரவர் (நாய்) நம்மை வரவேற்பது போல் எதிரே வந்து கோயில் வரை அழைத்துச் செல்லும். திரும்பி வரும்போதும் இவ்வெல்லை வரை வந்து வழியனுப்பும். இது பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகும். இந்த எல்லையிலேயே அருவியொன்றுண்டு. சுமார் பத்தடி கீழிறங்கி அருவியை அடைய வேண்டும். இவ்வருவியில் குளித்ததும் மலையேறி வந்த களைப்பு, உடல் அசதி அனைத்தும் ஒரு நொடியில் மறைவது வினோதமே. பல மூலிகைகள் கலப்பு காரணமாக இருக்கலாம்.
முதலில் நாம் தரிசிப்பது பலாவடி கருப்பசுவாமி. இரு பலாமரங்களின் அடியில் கருப்பசுவாமிக்குரிய அரிவாள் வைக்கப்பட்டு காவல் தெய்வமாக விளங்கி நிற்கிறது (தற்போது இங்கு சுதையில் ஸ்ரீ கருப்பசாமி சிலை வைக்கப்பட்டுள்ளது). இதன் முன்பு சலசலவென ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் ஸ்நானம் செய்வது உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமளிப்பதாகும்.அடுத்து நாம் தரிசிப்பது ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி ஓடையைக் கடந்து தென்புறமுள்ள குன்றின் மீதேறி இந்த லிங்க தரிசனம் பெறுகிறோம். அகஸ்திய மாமுனிவர் இம்மலைக்கு வந்திருந்தபோது, தான் பூஜை செய்து வழிபடுவதற்காகப் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியாகுமிது. மேலும், தவம் மேற்கொள்ள அவர் பொதிகைக்குப் புறப்பட்டபோது, அருகிலிருந்த சுந்தரானந்த முனிவர், அகஸ்தியர் பூஜை செய்தது போன்று வழிபாடுகளைத் தொடர்ந்து தான் செய்து வர அகஸ்தியரின் அனுமதி பெற்று அவ்வாறே செய்து வந்தார். பலகாலம் சுந்தரானந்தரால் பூஜிக்கப் பெற்றமையால் “சுந்தரலிங்கம்” என அழைக்கப்பட்டது.
இத்தலத்தின் பிரதான ஆலயமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி வரலாறு ஸ்தலபுராணம் மலையடிவாரத்திலுள்ள மாவூத்து ஸ்ரீ உதயகிரிநாத சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கயிலையில் யாழ்வல்ல தேவர் என்ற சிவகணமும் பார்வதியின் தோழி தெய்வநங்கையும் இச்சை கொண்டு நோக்க, சிவபெருமான் அவர்களை பூலோகத்தில் ஜெனித்து இன்ப துன்பம் அனுபவித்த பின்னர் தான் வந்து முக்தியளிப்பதாகக் கூறி அனுப்பினார். மாவூத்து அருகிலுள்ள கோட்டையூர் எனும் கிராமத்தில் பச்சைமால் எனும் பெயருடன் யாழ் வல்லதேவர் பிறந்தார். தெய்வநங்கை அவரது அத்தை மகளாக சடை நங்கை என்ற பெயரில் பிறந்து வளர்ந்தாள். தக்க பருவத்தில் இருவருக்கும் மணமுடித்தனர்.
மலை அடிவாரத்தில் மாட்டு மந்தைகளை மேய்த்து வந்த பச்சைமால் கறந்து கொடுக்கும் பாலைப் பெற்று வீடு சேர்ப்பது சடை நங்கையின் கடமை, ஒரு தினம் சித்தர் (புருடர்) ஒருவர் தோன்றி, சடைநங்கையிடம் தாகம் தீர்க்க பால் கேட்டார். மறுக்காமல் சடை நங்கையும் வழங்கினாள். இவ்வாறு தொடர்ந்து பல தினங்கள் சித்தபுருடர் பால் அருந்தி வந்தார். பால் குறைவுபடுவதைக் குடும்பத்தினர் பச்சைமாலிடம் தெரிவித்தனர்.
பச்சைமால், மனைவி அறியாமல் பின் தொடர்ந்து வந்து, அவள் எவருக்கோ பால் கொடுப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார். இதையடுத்து, சடை நங்கையை சடாதாரி அம்மன் என்ற பெயரில் தெய்வமாக்கி, அவரை வழிபடுவோர்க்கு வேண்டியது கிடைக்குமெனக் கூறிய சித்தர், உதயத்தில் அருகிலிருந்து கட்டிடத்துள் நுழைந்து லிங்கமாகி உதயகிரிநாதர் எனப் பெயர் பெற்றார். இப்பொழுதும் மகாலிங்கமலைக்குச் செல்லும் பக்தர்கள் பலர் தம்பிபட்டி அருகிலுள்ள மாவூத்து ஸ்ரீ உதயகிரி நாதரையும், ஸ்ரீ சடாதாரி அம்மனையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மனைவி தெய்வமாகி, தான் தனியனாகிப் போன பச்சைமால், மாட்டுக்கிடையுடன் சதுரகிரி மலைக்குச் சென்றான். அங்கிருந்த சுந்தரானந்த முனிவர் போன்ற ரிஷிகளுக்கும், சிவலிங்க (சுந்தரலிங்கம்) அபிசேகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பசுவின் பாலைக் கொடுத்து வந்தான். பச்சைமால் இவ்வுலகிலிருந்து கைலாயம் செல்லும் காலம் வந்ததறிந்த சிவபெருமான் ஒரு பரதேசியாக சதுரகிரி மலை வந்தார்.
பச்சைமால் நிவேதனத்திற்காக ஒதுக்கிய பசுவை மறைத்து வைத்தார். அப்பசுவைக் காணாது பல திசைகளிலும் அலைந்து திரிந்த பச்சைமால் அப்பசுவின் காம்பிலிருந்து நேரடியாக ஒரு பரதேசி பாலருந்துவதைப் பார்த்தான். கடுங்கோபத்துடன் கையிலிருந்த கோலால் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அப்பரதேசியை அடித்தான். அவர் தலையில் காயம்பட்டு சாய்ந்தார்.
இந்த அமளியைக் கேட்டு சுந்தரானந்தர் முதலிய ரிஷிகள் அங்கு வந்து பார்க்க, அந்தப் பரதேசி ரிஷபாரூடராகக் காட்சியளித்தார். பச்சை மாலை கயிலைக்கு அழைத்துச் செல்ல தான் வந்ததாகக் கூறினார். பச்சைமாலும், மற்றுமுள்ள ரிஷிகளும் தேவரீர் இங்கே நிரந்தரமாக எழுந்தருளி, மலையேறி வரும் பக்தர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திக்க, பெருமான் மகாலிங்கமாக எழுந்தருளினார். இன்றும் இந்த லிங்கம் சாய்ந்திருப்பதையும், உச்சியில் வடு இருப்பதையும் காணலாம். பச்சைமால் யாழ்வல்ல தேவராக கயிலை சென்றார்.
மலையிலிருந்த ரிஷிகள் சித்தர்கள் நவராத்திரி ஒன்பது தினங்களும் தவம், விரதங்கள் மேற்கொண்டு அம்பிகையை இங்கே நிரந்தரமாக அருளாட்சி செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். அதனை ஏற்ற அம்பாள் “ஆனந்தவல்லி” எனும் திருநாமத்துடன் சக்திபீடமாக விளங்கி எண்ணற்ற பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள்.
பிருகுமுனி காரணமாக, இறைவனிடமிருந்து பிரிக்க முடியாத நிலை வேண்டுமென்று தவமிருந்த பார்வதி, ஒரு சந்தன மரத்தடியில் ஏற்படுத்திய லிங்கம் சந்தனலிங்கம் என அழைக்கப்படுகிறது. இதனருகில் அமைந்துள்ள பெருங்குகை சட்டநாதர் குகையாகும். இன்றும் இச்சித்தர் இங்கு வாழ்வதாகப் பலர் உணர்கின்றனர் (பெரும் குகையை மறைத்து எட்டிப் பார்க்குமளவு சிறுபிளவு மட்டுமே தற்போது உள்ளது). இக்கோயிலுக்கு மேலேயுள்ளது காளிகாவனம் என்றழைக்கப்படும் பெருங்காடு. இங்கு காளி ஆட்சி செய்வதாக ஐதிகம். இக்கானகத்திலிருந்து வரும் ஓடையும், அருவியும் காளிகாதீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
மகாலிங்கம் கோயிலுக்குத் தென்புறம் சுமார் 1 கி.மீ. உயரத்திலுள்ள ‘தவசிக் குகை’ அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். செல்லும் வழி அடர்ந்த கானகம். அதில் வெள்ளைப் பிள்ளையார் எனும் ஓர் பெரும் பாறை உள்ளது. ஒருபுறம் நின்று பார்த்தால் பெரிய விநாயகர் தோற்றம் தரும். சற்று தள்ளி நின்றால் வெறும் பாறையாகத் தோன்றும். இன்னும் மேலே செல்லும் வழியில் ஒரு மரத்திடையில் அரையடி உயரமுள்ள விநாயகர் சிலையொன்றுண்டு.
அரையடி அகலமுள்ள பலகைக் கல்லில் உளிபடாமல் மற்றொரு கல்லைக் கொண்டு இந்த விநாயகர் உருவம் உண்டாக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் எந்த சித்தரால் உருவாக்கப்பட்டதோ இம்மூர்த்தி. வனத்தில் பெரும் பிரம்புக் கொடிகள் காற்றிலாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனந்தவல்லி ஊஞ்சலாடுகிறாளென வழிபடுகின்றனர்.
இம்மலையில் ஏராளமான மூலிகைகள் உள்ளன. மலைவாழ் பளியர்கள் அனைத்து மூலிகை வகைகளையும் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்வது இயலாததாக உள்ளது. ஜோதிர்வதை எனும் செடிகள் இரவில் ஒளி வீசுகின்றன. அமாவாசை தின இரவுகளில் எருமை கனைக்கும் குரல் கொடுக்கும் மரம் “கனை எருமை” ஊசியிலே உள்ள மிளகாய், சுண்டைக்காய் அளவில் நன்கு பழுத்த தக்காளிப்பழம் வியப்படைய செய்யும். மலை எங்கும் கசப்பற்ற பால் சுண்டைக்காய்கள் உண்டு.
ஒரு மரத்தின் பால் மனிதர் மேல் பட்டால் முகம் வீங்கிக் கொண்டே செல்லும். மரத்தின் பெயரே “முகரை வீங்கி.” தொடர்ந்து மூன்று தினங்கள் சந்தனம் பூசி வர வீக்கம் குறைந்து விடுகிறது. பூமிக்கடியிலிருந்து கோரைக் கிழங்கு எடுத்து வருகிறார்கள். ஒரு ஆள் உயரத்தில்கூட இக்கிழங்கு உள்ளது. பச்சையாகவே இதனை வெட்டி மலைத்தேனுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக உள்ளது. கிழங்கு இருக்குமிடம், அதனை எடுத்தல், தேன் கொண்டு வரல் அனைத்தும் பளியர்களாலேயே முடிகிறது. இன்னும் எண்ணற்ற மூலிகைகள் இங்குள்ளன.
பலவகையான மிருகங்கள், பறவைகள் உள்ளன. கடுவாய், கரடி, காட்டுப்பன்றி கூட்டங்கூட்டமாக யானைகள், சுமார் நான்கடி நீளம் உள்ள வால் கொண்ட மந்திகள் (இசை ஒரு தாவலில் சுமார் நாற்பதடி தூரம் கடக்க வல்லவை). மான், வரையாடு, மயில், சுமார் இரண்டடி நீள வாலுடைய காட்டுக் கோழி, ஒன்றரையடி உயரமே உள்ள சரகு மான் (இசை சருகுகளுக்கிடையே வாழ்கின்றன). மரத்திற்கு மரம் பறக்கும் அணில் (வாத்து கால் விரல்களுக்கிடையே மெல்லிய தோல் போன்ற அமைப்பு இந்த அணில் கால்களுக்கிடையே உள்ளது). மலைப்பாம்பு, பறக்கும் பாம்பு உள்பட ஏராளமான பாம்பு வகைகள் உள்ளன.
பாறை அமைப்புகள் பலவிதங்களில் உள்ளது. பாறை நெகிழ்வது ஒரே மாதிரியன்றி வேறு வேறு விதமாக அமைந்துள்ளது. அடுக்குப் பாறைகள் உள்ளன. தாவரவியல், விலங்கியல், பாறையியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இம்மலை ஒரு வரப்பிரசாதமாகும்.
இங்கு ஆடி அமாவாசையன்று, இலட்சக்கணக்கான சேவார்த்திகள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சித்தர்கள் வாழும் இம்மலையை அக்காலம் முதல் இக்காலம் வரை போற்றி வரும் பரதேசிகளுக்கு திருவிழாவின்போது சிறப்பான மரியாதைகள் வழங்கப்படுகின்றன. வந்திருக்கும் பரதேசிகளுள் முதிர்ந்தவர் ஒருவரைத் தலைவராகக் கொள்கின்றனர்.
அத்தலைவரும் கோயில் நிர்வாகியும் ஒரே இலையில் இரு பக்கமும் அமர்ந்து உணவருந்துகின்றனர். அனைத்துப் பரதேசிகளுக்கும் விருந்தளிக்கப்படுகிறது. இச்சாதுக் கூட்டத்தினர் இத்துடன் கலைந்து செல்வதில்லை. ஒரே குழுவாக மலையிலிருந்து இறங்கி, பல ஊர்களுக்கும் சென்று ஒரு மாதம் கழித்து ஆவணி மாதம் சாலிச் சந்தை நாடார் உறவின் முறையினர் உபசரிப்பைப் பெற்று பிரிந்து செல்கின்றனர்.
நவராத்திரி ஒன்பது தினங்களும் ஆனந்தவல்லியம்மன் கொலுவிருக்கிறாள். விஜய தசமியன்று பாரிவேட்டையும் அன்னையே நடத்துகிறாள். சர்வபூரண பூஷிதையாக அம்பாள் புறப்படும்போது பளியர் இளம் பெண்களனைவரும் வந்து வாழ்த்துப் பாடல் பாடி உணர்ச்சி வசப்பட்டு, அம்பாளுக்கு வெற்றி திலகமிட்டு வேட்டைக்கு அனுப்பும் காட்சி காண்பவரைப் புல்லரிக்கச் செய்வதாக உள்ளது. நவராத்திரி உற்சவத்தின்போது சுமார் இருபதாயிரம் மக்கள் வந்து வழிபடுகின்றனர்.
அமாவாசை, பௌர்ணமியன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். அமாவாசையன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு மகாலிங்கத்திற்கு பதினொருவகைப் பொருட்களால் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுந்தரலிங்கம், பலாவடிகருப்பு, சந்தன லிங்கத்திலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை ஏழு மணியாகும் இறுதி வழிபாடு. பௌர்ணமியன்று இதே அபிஷேகம் வழிபாடுகள் மாலை ஆறு மணிக்கு தொடங்கி நள்ளிரவில் முடியும்.
அடுத்து வரும் ஆடி அமாவாசையன்று இயன்றவர்கள் அனைவரும் சதுரகிரி சென்று இறையருளும் சித்தர்கள் ஆசியுடன் பெற்று வரலாம். மலைவளங்கள் காண விரும்புவோர் பௌர்ணமியை ஒட்டி சில தினங்கள் தங்கும்படி சென்று அனைத்தும் கண்டு வரலாம். பௌர்ணமியின்போது சில தினங்கள் சந்தனமகாலிங்கம் சன்னிதியில் சிறப்பான முறையில் அன்னதானம் உண்டு
கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல்
(தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விளக்கேற்றி இந்தப் பாடலைப் படிக்கவும்.)
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய மாமுனி எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் சுபிட்சம் பெருகும். இந்தப் பாடல் எழுதிய ஏடுகள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. இதைத் தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1564 முதல் 1604ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்தப் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப் பாடல் வருமாறு:
மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரந்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவர் பழிச்சுகின்றார்
கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்!
கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ.
மடற்கமல நறும்பொருட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ
மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துளாரே!
செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கன்உல கிருள்துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குலை நீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!
திருமலையில் புராதன அகத்தியர் தலம் சிங்களப் படைகளால் துடைத்தழிப்பு!!!
திருமலை மாவட்டம் மூதூர் கங்குவேலி வனப்பகுதியில் புராதன காலம்தொட்டு அமைந்திருந்த அகத்தியர் தாபனம் சிங்களப் படைகளால் எச்சங்கள் எதுவுமின்றி துடைத்தழிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் நாள் சனிக்கிழமை அகத்தியர் தாபனம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று திரும்பிய கங்குவேலி பிரதேசவாசிகளால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கங்குவேலியில் இருந்து ஐந்து கிலோமீற்றர் மேற்கேயுள்ள வனப்பகுதியில், மகாவலி கங்கைக்கு அருகில் அமைந்திருந்த அகத்தியர் தாபனத்திற்கு ஆடி அமாவாசைக் காலத்தில் சைவ மக்கள் சென்று வருவது வழமை.
இவர்களை விட இங்கு சேனைப் பயிர்ச்செய்கையாளர்களும், விறகுத் தொழிலாளர்களும் அடிக்கடி சென்று வருவதுண்டு.
இங்கு அமைந்திருந்த கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், ஈழத்தை முதன் முதலாக சோழர்கள் ஆட்சிசெய்வதற்கு முன்னரே (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) நிறுவப்பட்டமைக்கான வரலாற்று சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேயிடத்தில் 18ஆம் நூற்றாண்டில் 2ஆவது அகத்தியர் தமிழ் பல்கலைக் கழகம் இயங்கியமைக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்பட்டன.
இவ்வாறான புராதன சிறப்பையும், புராண காலப் பதிவுகளையும் கொண்ட அகத்தியர் தாபனத்தை கடந்த ஓரிரு நாட்களுக்கு சிங்களப் படைகள் துடைத்தழித்துள்ளன.
திருக்கரசுப் புராணத்தின் படி, கைலையில் சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும் திருமணம் இடம்பெற்ற பொழுது, கைலைமலை சரிந்ததாகவும், இதனை சீர்செய்யும் நிமித்தம் ஈழத்தின் திருமலைக்கு அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் – பார்வதி திருமணத்தை தரிசித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.
இவ்வாறான பிரசித்தி பெற்ற அகத்தியர் தாபனத்தை, நீலாப்பொல எனப்படும் சிங்களக் குடியேற்றத்தைச் சேர்ந்த சிங்களக் குடியேற்றவாசிகளின் துணையுடனேயே சிங்களப் படைகள் துழைத்திழித்திருப்பதாக கங்குவேலி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: உலக தமிழ் இணையம் (http://www.worldtamilweb.com/?p=516)
அகத்தியர் புத்தகம்
http://noolaham.net/project/46/4598/4598.pdf
அகத்தியர் தனிக்கோவில்
தென்னாட்டிற்கு உமையம்மையுடன் வந்து தன் திருமணக் காட்சியை அகத்தியருக்கு அருளுவதாகவும் கூறினார் சிவபெருமான். அதன்படி அகத்தியரும் தென்னாட்டிற்கு வந்து பல தலங்களைத் தரிசித்து, கடைசியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலையில் வந்து தங்கித் தவம் செய்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. பாபநாசம் உட்பட பல தலங்களில் இறைவன் திருமணக் காட்சி அருளியுள்ளார். இப்பொழுதும் அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.
பொதிகை மலை இருக்கும் பகுதியான அம்பாசமுத்திரமும் அதனைச் சுற்றியுள்ள பல இடங்களும் முத்தமிழிலும் புலமை பெற்ற தமிழ் முனிவர் அகத்தியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இவர் பல திருக்கோவில் களில் சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் உண்டு. இதற்குச் சான்றாக தமிழகத்தில்- குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த கற்றளி (கருங்கல் கோவில்) சிவாலயங்களில் அகத்தியரின் திருவுருவச் சிலைகளை நாம் காணலாம். அகத்தியர் தனியாக அல்லது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதாக வடிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து அகத்தியருக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்ட தொன்மைத் தொடர்பை நாம் அறியலாம்.

இத்தனை பெருமை வாய்ந்த அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் ஒரு கோவில் அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் அகத்தியப் பெருமான் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆலய முகப்பில் நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே அகத்தியர், லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன.
அடுத்து நடராஜர்- சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. இவருக்கும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அகத்தியருக்கென்று ஏற்பட்ட ஒரே கோவில் என்ற பெருமை உடையது இந்தக் கோவில்.
கருவறையில் அகத்தியர் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், மீசை, தாடியும் அமைந்துள்ளது. அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியுள்ளார். அகத்தியர் தென் தமிழ் நாட்டுக்கு வரும்போதே மணம் புரிந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சித்தர் என்னும் பெயர் கொண்ட மெய்யறிவு வாய்ந்த புலவர் பிறந்த தாகவும் கூறுவர்.
இந்த அகத்தியர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள், அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கைக்கோள முதலியார் இன மக்கள் இவரை தெய்வமாக வழிபடு கின்றனர்.
திருநெல்வேலியிலிருந்து அம்பாச முத்திரம் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இவ்வூரில் காசீசர், அம்மையப்பர், வீரமார்த்தாண்டீஸ்வரர் சிவாலயங்களும்; கிருஷ்ண சுவாமி, புருஷோத்தம பெருமாள் வைணவ ஆலயங்களும் உள்ளன.
அகத்தியர் வரலாறு
அகத்தியர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை
வழங்கிய முனிவர் என்றும்
அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார்.
வரலாறு
- சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
- தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.
- புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
அகத்தியரின் சிறப்புகள்
அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.
- தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
- அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை(ஆற்றல்களைப்) பெற்றார்.
- அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
- கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
- தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
- இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
- சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
- இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
- அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
- வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.
சித்த வைத்தியம்
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
அகத்தியர் எழுதிய நூல்கள்
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
- அகத்தியர் வெண்பா
- அகத்தியர் வைத்தியக் கொம்மி
- அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
- அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
- அகத்தியர் வைத்தியம் 1500
- அகத்தியர் வைத்திய சிந்தாமணி
- அகத்தியர் கர்ப்பசூத்திரம்
- அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
- அகத்தியர் வைத்தியம் 4600
- அகத்தியர் செந்தூரம் 300
- அகத்தியர் மணி 4000
- அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
- அகத்தியர் பஸ்மம் 200
- அகத்தியர் நாடி சாஸ்திரம்
- அகத்தியர் பக்ஷணி
- அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
- சிவசாலம்
- சக்தி சாலம்
- சண்முக சாலம்
- ஆறெழுத்தந்தாதி
- காம வியாபகம்
- விதி நூண் மூவகை காண்டம்
- அகத்தியர் பூசாவிதி
- அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
- அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
- அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்
- தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
- சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
- தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
- விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
- கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
- சித்த வைத்திய சிகரமே போற்றி!
- சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
- இசைஞான ஜோதியே போற்றி!
- உலோப முத்திரையின் பதியே போற்றி!
- காவேரி தந்த கருணையே போற்றி!
- அகத்தியம் தந்த அருளே போற்றி!
- இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
- அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
- அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
- இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
- இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
- இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
- கல்வித்தடை நீங்கும்.
- புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
- முன்வினை பாவங்கள் அகலும்.
- பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
- பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
- பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
- சகலவிதமான நோய்களும் தீரும்.
- குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
காவேரி தந்த அகத்திய சித்தர்
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.
தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார்.
வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்:
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று.
Monday, July 18, 2011
அகத்தியர் (திரைப்படம்) Agathiyar (Tamil Film)
Sunday, July 17, 2011
ஆடி அமாவாசை (ஜூலை 30 ஆடி அமாவாசை)
முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டுவந்தான். இவனுக்கு குழந்தைகள் இல்லை. பல புண்ணிய தலங்களுக்கு சென்று விரதம் மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான். அதன் பலனாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அழகேசன் என பெயரிட்டனர்.
கத்தலைராஜா ஒரு முறை வேட்டைக்கு சென்றான். தாகத்தின் மிகுதியால் ஒரு சுனையைத் தேடிச்சென்றான். தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கவும் எதிரே ஒரு காளி கோயில் இருந்தது தெரிந்தது. காளி மாதாவை தரிசித்தான்.அன்னையிடமிருந்து ஒரு வாக்கு வெளிப்பட்டது. மன்னா! நீ ஆசையோடு வளர்க்கும் உன் அருமை மகன் 16ம் வயதில் இறந்துவிடுவான் என சொல்லிவிட்டு அடங்கிவிட்டது. மன்னன் தவித்தான்.
தாயே! இது என்ன கொடுமை? வேண்டுமானால் என் உயிரையும், என் மனைவியின் உயிரையும் இப்போதே எடுத்துக்கொள். அவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு, என அழுதுகொண்டும் ஆவேசத்தோடும் சொல்லியபடியே, வாளை எடுத்து தன்னை மாய்க்க ஓங்கினான்.
மன்னா! பொறு. நான் சொல்வதைக் கேள். உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள் காளி. காலமும் விரைந்து ஓடியது. அழகேசனுக்கு 15 வயதானது. இன்னும் ஒரு ஆண்டில் மகன் உயிர்நீத்துவிடுவான் என்று எண்ணிய அரசன் மனம் வருந்திக் கொண்டிருந்தான்.
ஒரு சிறிய கிராமத்திற்கு சென்றான். அங்கே தேவசர்மா என்ற முதியவர் வாழ்ந்தார். அவருக்கு ஏழு ஆண்மக்கள். கடைசியாக ஒரு பெண் குழந்தை. குழந்தை பிறந்ததும் அவரது மனைவி ஜன்னி கண்டு இறந்துவிட்டாள். இதனால் அந்த பெண் குழந்தையை எல்லாரும் வெறுத்தார்கள். அண்ணன்களுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. கங்கா என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணுக்கு மட்டும் திருமணம் நடக்கவில்லை.
அனைத்து அண்ணிகளும் கங்காவை கொடுமைப்படுத்தினர். கங்காவுக்கு சாப்பாடு கொடுப்பதில்லை. தண்ணீரை குடித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தினாள்.
ஒருமுறை வீதியில் பறை அறிவிக்கப்பட்டது. அழகாபுரி மன்னன் மகன் இறந்து விட்டான். அவனது சடலத்திற்கு யாராவது நற்குணமுள்ள பெண் கொடுத்தால் அந்த குடும்பத்திற்கு வேண்டும் அளவு செல்வம் தரப்படும், என கூறப்பட்டது. அண்ணிகள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் கணவன்மாரை வசப்படுத்தி கங்காவை சடலத்திற்கு திருமணம் செய்துவைக்க கட்டாயப்படுத்தினர். அவளுக்கு அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஆனால் விஷயத்தை சொல்லவில்லை. கங்காவுக்கு ஏதும் புரியவில்லை.
நேற்றுவரை கொடுமை செய்த அண்ணிகள் இன்று இவ்வாறு உபசரிப்பதன் காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள். அவளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ள விஷயத்தை அண்ணிகள் சொன்னார்கள். மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஏழையான தன்னை அரண்மனைக்கு அழைத்து வந்திருப்பதன் காரணத்தை தெரிந்துகொள்ளாமல் கலங்கினாள்.
ஆயினும் தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்றாள். மணவறையில் அமரவைக்கப்பட்டாள். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர். பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது.
அருகில் இருந்த சடலத்தைப் பார்த்து கங்கா அதன் அழகில் லயித்துப்போனாள். தனக்கு இப்படிப்பட்ட அழகான கணவன் கிடைத்ததற்காக பெருமைப்பட்டாள். அசதியின் காரணமாக அவன் உறங்குகிறான் என நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே கணவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவன் அசையவில்லை.
அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது. தனக்கு செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். அப்போது வான் வழியே பார்வதியும், பரமேஸ்வரரும் புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் ஓலம் கேட்டது.
பார்வதிதேவி சிவனிடம், அந்தப்பெண் எதற்கோ அழுகிறாள். என்னவென்று கேட்டு வருவோம், என்றாள். சிவன் அவளிடம், அந்தப்பெண் அறியாமல் ஒரு சடலத்தை திருமணம் செய்துகொண்டுவிட்டாள். அதை நினைத்தே அழுகிறாள். அவனது விதி முடிந்துவிட்டது. நாம் போகலாம் வா, என்றார்.
கருணைக்கடலான பார்வதிதேவி பிடிவாதம் பிடித்தாள். அந்தப்பெண்ணை அவசியம் பார்க்க வேண்டும் என்றாள். இதற்காகத்தான் அம்மன் வழிபாடு இப்போதும் பிரபலமாக இருக்கிறது. ஆண் தெய்வங்களை வணங்குவதைவிட அம்மனை வணங்கினால் காரியம் விரைவில் கைகூடிவிடும் என்பது நம்மவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
கிராமப்புறங்களில் அம்மன் வழிபாடு அதிகரிக்க இதுவே காரணம். இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதிதேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களை கட்டிக் கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகல விட மாட்டேன் என சூளுரைத்தாள்.
சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன்வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது.
உன் கணவன் உடனே எழுவான், என்றார். அழகேசனும் எழுந்தான். பார்வதிதேவி கங்காவிடம், உனது வரலாற்றை படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும், என அருள்பாலித்தாள்.